/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூடைப்பந்தில் ரைசிங் ஸ்டார் அணி அபாரம் கூடைப்பந்தில் ரைசிங் ஸ்டார் அணி அபாரம்
கூடைப்பந்தில் ரைசிங் ஸ்டார் அணி அபாரம்
கூடைப்பந்தில் ரைசிங் ஸ்டார் அணி அபாரம்
கூடைப்பந்தில் ரைசிங் ஸ்டார் அணி அபாரம்
ADDED : ஜூன் 22, 2024 12:18 AM
சென்னை,
மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில், 20ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
இதில், ஆண்களில் 38 அணிகளும், பெண்களில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.
பெண்களுக்கான நாக் - அவுட் போட்டியில், ரைசிங் ஸ்டார் மற்றும் பிசியோ கேர் பி.சி., அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 97 - 82 என்ற கணக்கில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், எத்திராஜ் கல்லுாரி அணி, 53 - 52 என்ற கணக்கில், தமிழக போலீஸ் அணியை தோற்கடித்தது. ஆண்களுக்கான லீக் சுற்றில் இந்தியன் வங்கி அணி, 102 - 66 என்ற கணக்கில், திண்டுக்கல் பி.சி., அணியை வீழ்த்தியது. இன்று இரவு, இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.