/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமும் மின்வெட்டு பிரச்னை நடுக்குப்பம்வாசிகள் அதிருப்தி தினமும் மின்வெட்டு பிரச்னை நடுக்குப்பம்வாசிகள் அதிருப்தி
தினமும் மின்வெட்டு பிரச்னை நடுக்குப்பம்வாசிகள் அதிருப்தி
தினமும் மின்வெட்டு பிரச்னை நடுக்குப்பம்வாசிகள் அதிருப்தி
தினமும் மின்வெட்டு பிரச்னை நடுக்குப்பம்வாசிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 07, 2024 12:26 AM
திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தில் தினமும் மின்வெட்டு பிரச்னை ஏற்படுவதால், அப்பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் மின் அழுத்தம் தாங்காமல், ஆங்காங்கே மின்மாற்றிகள் தீப்பிடித்து எரிகின்றன. பூமிக்கடியில் செல்லும் மின் வடங்களும் பழுதடைகின்றன.
இந்நிலையில், திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதி மக்கள், தினந்தோறும் மின்வெட்டு பிரச்னையால் தவிக்கின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் போது மட்டும், ஓரிரு நாள் மின்வெட்டு பிரச்னை இல்லை.
மீண்டும், பழையபடி பிரச்னை ஏற்படுகிறது. இதனால், அப்பகுதிவாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, நடுக்குப்பம்வாசிகள் கூறியதாவது:
நடுக்குப்பம் பகுதியில் ஒரு 'லைன்' மட்டும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு, இரவு நேரத்தில் மின்வெட்டு தொடர்கிறது. புகார் அளித்தாலும் அந்த நேரத்திற்கு வந்து சரி செய்யப்படுகிறது.
முழுமையாக மின்வடங்களை மாற்றுவதில்லை. கால்வாய் பகுதிகளில் நிறைய வீடுகள் உள்ளன. இங்கு, முறையாக மின் இணைப்பு பெறவில்லை என தெரிகிறது.
ஆரம்பத்தில், கால்வாய் ஓரம் வீடு கட்டியவர்கள் ஒரு மின்விசிறி, ஒரு மின் விளக்கு என இருந்தனர். ஆனால் தற்போது, அவர்கள் வீட்டிலும் 'ஏசி', பிரிஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர் என, அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், அதிகம் மின் அழுத்தம் ஏற்பட்டு, நடுக்குப்பம் பகுதியில் அடிக்கடி, இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.