/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மலையம்பாக்கம் வழியாக பேருந்து இயக்க கோரிக்கை மலையம்பாக்கம் வழியாக பேருந்து இயக்க கோரிக்கை
மலையம்பாக்கம் வழியாக பேருந்து இயக்க கோரிக்கை
மலையம்பாக்கம் வழியாக பேருந்து இயக்க கோரிக்கை
மலையம்பாக்கம் வழியாக பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 12:12 AM
குன்றத்துார், சென்னை புறநகரான குன்றத்துார் ஒன்றியத்தில் மலையம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, வடக்கு மலையம்பாக்கம், தெற்குமலையம்பாக்கம் ஆகிய இரு பகுதிகளில், 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும், மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், குன்றத்துார் அல்லது பூந்தமல்லி செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், மலையம்பாக்கத்தில் அரசு பேருந்து சேவை இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, குன்றத்துாரில் இருந்து மலையம்பாக்கம் வழியே பூந்தமல்லிக்கு அரசு பேருந்து இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.