/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உள்வாங்கிய சாக்கடை மூடி சீரமைக்க வேண்டுகோள் உள்வாங்கிய சாக்கடை மூடி சீரமைக்க வேண்டுகோள்
உள்வாங்கிய சாக்கடை மூடி சீரமைக்க வேண்டுகோள்
உள்வாங்கிய சாக்கடை மூடி சீரமைக்க வேண்டுகோள்
உள்வாங்கிய சாக்கடை மூடி சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 11, 2024 12:32 AM

பெருங்குடி மண்டலம், வார்டு 186, புழுதிவாக்கம், பாலாஜி நகர் விரிவு, 18வது தெருவில் கடந்த மாதம் புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது, அந்த வழித்தடத்தில் இருந்த இரு பாதாள சாக்கடை இயந்திர நுழைவாயில்கள் அரை அடி ஆழம் உள்வாங்கி விட்டன.
இந்த சாலையை ஒட்டி 1,000 மாணவர்கள் பயிலும், தனியார் பள்ளி உள்ளது.
அவ்வழியாக நடந்து செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தால் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இரு மேன்ஹோல்களையும் சாலை மட்டத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.கோபிநாத், புழுதிவாக்கம்.