/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணலியில் 15 சாலைகள் ரூ.2.24 கோடியில் சீரமைப்பு மணலியில் 15 சாலைகள் ரூ.2.24 கோடியில் சீரமைப்பு
மணலியில் 15 சாலைகள் ரூ.2.24 கோடியில் சீரமைப்பு
மணலியில் 15 சாலைகள் ரூ.2.24 கோடியில் சீரமைப்பு
மணலியில் 15 சாலைகள் ரூ.2.24 கோடியில் சீரமைப்பு
ADDED : ஜூலை 29, 2024 02:37 AM
திருவொற்றியூர்:மணலி மண்டலம், 21வது வார்டில், குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை வழித்தடம், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, சாலை ஆங்காங்கே வெட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டும் அலங்கோலமாக காட்சியளித்தது.
பணிகள் முடிந்த சாலைகளில், தார் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், 2.24 கோடி ரூபாய் செலவில் 15 தார்ச்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக அம்பேத்கர் தெரு, சன்னிதி தெரு, எட்டியப்பன் தெரு, பி.ஆர்.கே சர்மா தெரு, ஆகிய தெருக்களில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. சீனிவாசன் தெருவில், 792 அடி நீளம்; 5.3 அடி அகலம் கொண்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
தாமரை குளம் முதல் தெரு, ஈ.வெ.ரா., பெரியார் தெரு, தீயணைப்பு நிலையம் குடியிருப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
தவிர, திரு.வி.க., தெரு உள்ளிட்ட ஐந்து தெருக்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.