/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குன்றத்துார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குன்றத்துார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குன்றத்துார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குன்றத்துார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குன்றத்துார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூன் 18, 2024 12:15 AM

பம்மல்பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வாக, அச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நெரிசலுக்கு, சாலையோர ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாக உள்ளது.
இந்நிலையில், பம்மல்முதல் அனகாபுத்துார் வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இச்சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஜே.சி.பி.,இயந்திரம் வாயிலாக நகரமைப்பு பிரிவினர், நேற்றில் இருந்து அகற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கை முடிந்தபின் முழு விபரம் தெரிவிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.