/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ' ராமச்சந்திரா' மாணவர்கள் யோகாவில் சாதனை ' ராமச்சந்திரா' மாணவர்கள் யோகாவில் சாதனை
' ராமச்சந்திரா' மாணவர்கள் யோகாவில் சாதனை
' ராமச்சந்திரா' மாணவர்கள் யோகாவில் சாதனை
' ராமச்சந்திரா' மாணவர்கள் யோகாவில் சாதனை
ADDED : ஜூன் 13, 2024 12:17 AM
சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், புஜங்காசன சாதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என, 1,240 பேர் பங்கேற்றனர். அவர்கள், 2 நிமிடம், 54 விநாடி புஜங்காசனம் செய்தனர். இதை உலகசாதனையாக அங்கீகரித்து, அதற்கான சான்றிதழை, 'வேர்ல்டு ரெக்கார்டுஸ் யூனியன்' நிறுவனத்தின் மூத்த அலுவலர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட், உடல், மருந்து மற்றும் வாழ்க்கை அறிவியல் துறை தலைவர் மாதங்கியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலையின் இணை துணை வேந்தர் மகேஷ் வக்கமுடி, பதிவாளர் ரூபா நாகராஜன், மூத்த ஆலோசகர் பார்த்தசாரதி, யோகா நிபுணர் கவிதா மோகன், யோகா பயிற்சியாளர் பிஜூதேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.