/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி
மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி
மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி
மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி
ADDED : ஜூன் 25, 2024 12:48 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 36; ரயில்வே சீனியர் டெக்னீஷியன். இவர், நேற்று காலை, தன் ஸ்கூட்டரில் பெரம்பூருக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது, திருவொற்றியூர் - மாட்டுமந்தை மேம்பாலத்தில், திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், புஷ்பராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விசாரிக்கின்றனர்.