/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது 1,363 பஸ் பயணியர் நிழற்குடை 'க்ளீன்' பொது 1,363 பஸ் பயணியர் நிழற்குடை 'க்ளீன்'
பொது 1,363 பஸ் பயணியர் நிழற்குடை 'க்ளீன்'
பொது 1,363 பஸ் பயணியர் நிழற்குடை 'க்ளீன்'
பொது 1,363 பஸ் பயணியர் நிழற்குடை 'க்ளீன்'
ADDED : மார் 15, 2025 12:25 AM

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 471 பிரதான சாலைகளில் பயணியர் வசதிக்காக, 1,363 பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று ஒரே நேரத்தில், அனைந்து நிழற்குடைகளும் துாய்மை படுத்தும் பணி காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, நிழற்குடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து அகற்றிய ஊழியர்கள், தொடர்ந்து மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
குறிப்பாக, ராயபுரத்தில், 136, தேனாம்பேட்டையில், 181 உள்ளிட்ட, 1,363 பஸ் நிறுத்தங்கள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் நிழற்குடையை சுற்றி ப்ளீச்சிங் பவுடரை தெளித்துவிட்டு சென்றனர்.