ADDED : ஜூலை 26, 2024 12:32 AM

ஆவடி, மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காதது ஆகியவற்றை கண்டித்து, ஆவடியில் தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி பொதுசெயலர் பிரேமலதா தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தி.மு.க. அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.
பிரேமலதா பேசுகையில்,''மின்சாரத்தை விட மின் கட்டண உயர்வு தான் 'ஷாக்' தருகிறது.
மின் கட்டண உயர்வை, அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில், சம்பந்தம் இல்லாதவர்களை கைது செய்கின்றனர்,'' என்றார்.