/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிரபல சீரியல் நடிகருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல் பிரபல சீரியல் நடிகருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல்
பிரபல சீரியல் நடிகருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல்
பிரபல சீரியல் நடிகருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல்
பிரபல சீரியல் நடிகருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல்
ADDED : ஜூலை 27, 2024 12:28 AM

திருவான்மியூர்,திருவான்மியூர், கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 45; விளம்பர மாடல் மற்றும் தனியார் 'டிவி' சீரியல் நடிகர். இவர், சூனியம் வைப்பதாக ஒரு பெண் மிரட்டுவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதன் விபரம்:
நான் பாக்கியலட்சுமி என்ற 'டிவி' தொடரில் நடித்து வருகிறேன். என் வீட்டிற்கு அருகில் உள்ள அறுபடை முருகன் கோவிலுக்கு, கடந்தாண்டு சென்றிருந்தேன். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், என்னுடன் 'செல்பி' படம் எடுக்க விரும்பினார். கோவில் என்பதால் மறுத்துவிட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், என்னுடைய மொபைல் போன் எண்ணை யாரிடமோ கேட்டறிந்து, என்னை தொடர்பு கொண்டார்; தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால், அவரது எண்ணை, 'பிளாக்' செய்துவிட்டேன்.
இந்நிலையில், என் வீட்டு முகப்பில் குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம் வைத்து, சூனியம் வைத்து விடுவேன் என மிட்டினார். அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை மிரட்டிய பெண்ணை தேடி வருகின்றனர்.