/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமிக்கு ஆண் குழந்தை கைதி மீது 'போக்சோ' சிறுமிக்கு ஆண் குழந்தை கைதி மீது 'போக்சோ'
சிறுமிக்கு ஆண் குழந்தை கைதி மீது 'போக்சோ'
சிறுமிக்கு ஆண் குழந்தை கைதி மீது 'போக்சோ'
சிறுமிக்கு ஆண் குழந்தை கைதி மீது 'போக்சோ'
ADDED : ஜூன் 04, 2024 12:54 AM
அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும்,16 வயதுக்கு சிறுமிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், இரு நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து, மருத்துவமனையில் இருந்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுமியை போலீசார் விசாரித்தனர்.
அப்போது, சிறுமியின் வீட்டின் அருகில் தினமும் பைக்கில் வந்து செல்லும் வாலிபர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி, வன்கொடுமை செய்தது தெரிந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த எல்சன், 22, என்பதும் இவர், கடந்த ஏப்ரலில் புளிந்தோப்பில் போதை ஊசியால் உயிரிழந்த தீனதயாளன் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதும் தெரிந்தது. சிறையில் உள்ள எல்சன் மீது, போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.