/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 'லுலு மார்க்கெட்' திறக்க திட்டம் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 'லுலு மார்க்கெட்' திறக்க திட்டம்
3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 'லுலு மார்க்கெட்' திறக்க திட்டம்
3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 'லுலு மார்க்கெட்' திறக்க திட்டம்
3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 'லுலு மார்க்கெட்' திறக்க திட்டம்
ADDED : ஜூன் 19, 2024 12:34 AM
சென்னை, சென்னையில், சென்ட்ரல், ஷெனாய் நகர், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், 'லுலு' நிறுவனத்தின் பிரமாண்டமான ஹைப்பர் மார்க்கெட். விரைவில் திறக்கப்பட உள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான லுலு நிறுவனம், பல நாடுகளில் பிரமாண்டமான விற்பனை வளாகங்களை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக கோவையில், இந்நிறுவனம் விற்பனை வளாகத்தை திறந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இந்நிறுவனம் பிரமாண்ட மார்கெட் அமைக்க இடம் தேடி வருகிறது. கோயம்பேடு, ஈஞ்சம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் இடம் தேடும் பணி நடந்தது.
இதில், முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில், ஹைப்பர் மார்கெட்டுகளை திறக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் காலி இடங்களை நிர்வகித்து வரும், ஒப்பந்ததாரரான, 'கிரேஸ் சர்வீசஸ்' நிறுவனத்துடன் லுலு குழுமத்துக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில், லுலு நிறுவனத்துக்கு, 1 லட்சம் சதுர அடி ஒதுக்க முடிவாகி உள்ளது.
இதே போல, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40,000 சதுர அடி ஒதுக்கப்பட உள்ளது. இது, 60,000 சதுர அடியாக அதிகரித்து ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் லுலு நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கப்பட உள்ளது.
இது தொடர்பான பேச்சில் விரைவில் உடன்பாடு ஏற்படுத்தப்பட உள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.