/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆலந்துார் ஜமாபந்தியில் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஆலந்துார் ஜமாபந்தியில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
ஆலந்துார் ஜமாபந்தியில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
ஆலந்துார் ஜமாபந்தியில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
ஆலந்துார் ஜமாபந்தியில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
ADDED : ஜூன் 26, 2024 12:16 AM

ஆலந்துார், ஆலந்துார் தாசில்தார்அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான இரண்டு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பங்கேற்று, மக்களிடம் இருந்து மனுக்களை நேரில் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
சிலர் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்த விபரங்கள் கேட்டு மனு அளித்தனர். நலச்சங்கத்தினர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்த மனுக்களை அளித்தனர். இலவச மனைபட்டா, குடும்ப அட்டை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் ஓய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, நிலப்பட்டா மாற்றம், சர்வே எண்கள் மாற்றம் தொடர்பாகவும் விண்ணப்பித்தனர். முதல் நாளில், 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், நில அளவைத்துறை உதவி இயக்குனர் மோகன், துணை கலெக்டர் புனிதவள்ளி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலந்துார் தாசில்தார் துளசிராமன் செய்திருந்தார்.