/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீவுத்திடலில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில்... நிரந்தர கண்காட்சி! ரூ.104 கோடி செலவில் பொழுதுபோக்கு மையம் தீவுத்திடலில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில்... நிரந்தர கண்காட்சி! ரூ.104 கோடி செலவில் பொழுதுபோக்கு மையம்
தீவுத்திடலில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில்... நிரந்தர கண்காட்சி! ரூ.104 கோடி செலவில் பொழுதுபோக்கு மையம்
தீவுத்திடலில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில்... நிரந்தர கண்காட்சி! ரூ.104 கோடி செலவில் பொழுதுபோக்கு மையம்
தீவுத்திடலில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில்... நிரந்தர கண்காட்சி! ரூ.104 கோடி செலவில் பொழுதுபோக்கு மையம்
ADDED : ஜூன் 21, 2024 11:18 PM

சென்னை, சென்னை, தீவுத்திடலில், ஒரு லட்சம் சதுர அடியில் நிரந்தர கண்காட்சிக்கூடம், அரங்குகள், கடைகள் கட்டுவதற்கான, 'டெண்டர்' நடவடிக்கையை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதிய வளர்ச்சித் திட்டங்களை சி.எம்.டி.ஏ., செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மத்திய சதுக்கம், கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் நகர்ப்புற சதுக்கம் ஆகியவை, மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக கட்டப்பட்டு உள்ளது.
இதே போல, சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், நகர்ப்புற தேவைக்கு ஏற்ற புதிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ., உருவாக்கி வருகிறது.
அத்துடன், 'சென்னை தீவுத்திடலில், மக்கள் பயன்பாட்டிற்கான பொழுதுபோக்கு மையம், 50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்' என, 2023 - 24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக தீவுத்திடலில், 30 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
தனியார் கலந்தாலோசகர்கள் வழிகாட்டுதல்கள் அடிப்படையில், தீவுத்திடலுக்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திட்டத்தின் மதிப்பீடு, 104 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நிரந்தர கண்காட்சி வளாகம், கடைகள் அமைக்க, 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், தலா 1,000 சதுர அடி பரப்பில், 400 கடைகள் கட்டப்பட உள்ளன.
இத்துடன், சிப்பி வடிவில் நிரந்தர கண்காட்சிக்கூடம் கட்டப்பட உள்ளது.
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அரசில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.