ADDED : ஜூன் 12, 2024 12:33 AM

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரூபேஷ் குமார். இரு நாட்களுக்கு முன், இவரது வீட்டு வாசலில் 'பெலிகான்' என்று அழைக்கப்படும் புள்ளி அலகு கூழைக்கடா சிறு காயங்களுடன் தங்கியுள்ளது.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர், பறவையை மீட்டு, மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தனர். பின், பெலிகான் பறவைகள் அதிகம் கூடும், ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் பத்திரமாக விடுவித்தனர்.