/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேவையற்ற இடத்தில் பஸ் நிழற்குடை மாற்றி அமைக்க பயணியர் கோரிக்கை தேவையற்ற இடத்தில் பஸ் நிழற்குடை மாற்றி அமைக்க பயணியர் கோரிக்கை
தேவையற்ற இடத்தில் பஸ் நிழற்குடை மாற்றி அமைக்க பயணியர் கோரிக்கை
தேவையற்ற இடத்தில் பஸ் நிழற்குடை மாற்றி அமைக்க பயணியர் கோரிக்கை
தேவையற்ற இடத்தில் பஸ் நிழற்குடை மாற்றி அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 02:34 AM

மாம்பலம்:மேற்கு மாம்பலத்தில் பேருந்து நிற்காத இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளை, ஆரியகவுடா சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்கு மாம்பலம் ஆரியகவுடா சாலை வழியாக, கே.கே., நகர்,- தி.நகர் செல்லும் பேருந்துகள் செல்கின்றன.
இவ்வழியாக, அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லும் தடம் எண் '11எச்' மற்றும் தி.நகரில் இருந்து பூந்தமல்லி செல்லும் '49ஏ' உள்ளிட்ட மாநகர பேருந்துகள் செல்கின்றன.
இதில், ஆரியகவுடா சாலை பிள்ளையார் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஆரியகவுடா சாலை போஸ்டல் காலனி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் என இரு இடங்களில் பேருந்து நிழற்குடை இல்லை.
இதனால், பயணியர் சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். ஆனால், மேற்கு மாம்பலம் ஜூபிலி சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படாத இடத்தில், இரு நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிழற்குடைகள், இரவு நேரங்களில் திறந்தவெளி குடிமையமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அங்கு, சமூக விரோத செயல்களும் நடப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த இரு நிழற்குடைகளை, ஆரியகவுடா சாலையில், தேவைப்படும் இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.