Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ADDED : ஜூன் 22, 2024 12:30 AM


Google News
சென்னை,“ஊராட்சிகளை ஆவடி மாநகராட்சியில் இணைப்பதால், 18,000 குடும்பங்களின் 100 நாள் வேலை திட்ட வாய்ப்பு பறிபோகும்,” என, மாதவரம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுதர்சனம், சட்டசபையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:

மாதவரம் ரவுண்டானா - சோழவரம் சுங்கச்சாவடி வரை 1,900 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் ஜி.எஸ்.டி., கட்டணத்தை விலக்கி கொண்டால், மத்திய அரசு அதற்கான பணத்தை கொடுத்து திட்டம் நிறைவேற்றப்படும் என, தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தமிழக அரசு ஜி.எஸ்.டி., கட்டணத்தை விலக்கிக் கொண்டு பணிகளை துவக்க அனுமதிக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தை விட ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு கொண்டதாக, திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி தாலுகா உள்ளது. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும். வில்லிவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மோரை, பாலவேடு, பொத்துார் ஊராட்சிகளை ஆவடி மாநகராட்சியில் சேர்க்கப்போவதாக செய்தி வந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் கோபத்துடன் போராட்டத்தில் ஈடுபட முயற்சிக்கின்றனர்.

அவ்வாறு இணைக்கப்பட்டால், 18,000 குடும்பங்கள், 100 நாள் வேலை திட்டத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, இணைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு சுதர்சனம் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us