ADDED : ஜூலை 08, 2024 01:39 AM
உத்தண்டி:சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, கிழக்கு கடற்கரை சாலையில், உத்தண்டி முதல் கானத்துார் எல்லை வரை உள்ளது. இந்த பகுதியின் கிழக்கு திசையில் துவங்கும் ஒவ்வொரு தெருவும், கடற்கரையில் முடிகிறது.
இதனால், இந்த தெருக்கள் வழியாக பொதுமக்கள் கடற்கரை செல்வர். இப்பகுதி கடற்கரையில் குப்பை, பிளாஸ்டிக், மரக்கழிவுகள், மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தன. இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
கடற்கரையில், 2 கி.மீ., துாரம் குப்பை குவிந்து கிடந்ததால், அந்த பகுதிக்கு மக்கள் செல்ல அச்சப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று, மாநகராட்சியின் 'உர்பேசர்' நிறுவன ஊழியர்கள், குப்பையை அள்ளி, கடற்கரையை சுத்தம் செய்தனர்.