ADDED : ஜூன் 13, 2024 12:30 AM
சேலையூர், சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் வருண் கிருஷ்ணா, 22. மே மாதம், கிழக்கு தாம்பரம், ரயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்தில் வாகனம் மாயமானது.
சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், முதியவர் ஒருவர், வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வேளச்சேரியை சேர்ந்த இளங்கோவன், 64, என்பவரை கைது செய்தனர்.
இளங்கோவன், 18க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி விற்றதும், சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்த அவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததும் தெரியவந்தது.
தனது ஒரே மகள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டதால், உணவுக்கு வழியின்றி திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.