/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பகிங்ஹாம் கால்வாயில் விழுந்த தடுப்பு சுவர் அகற்றி சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் பகிங்ஹாம் கால்வாயில் விழுந்த தடுப்பு சுவர் அகற்றி சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
பகிங்ஹாம் கால்வாயில் விழுந்த தடுப்பு சுவர் அகற்றி சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
பகிங்ஹாம் கால்வாயில் விழுந்த தடுப்பு சுவர் அகற்றி சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
பகிங்ஹாம் கால்வாயில் விழுந்த தடுப்பு சுவர் அகற்றி சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஆக 02, 2024 12:48 AM

திருவொற்றியூர், சென்னை, பேசின் பிரிட்ஜ் - எண்ணுார் முகத்துவாரம் வரை, 17 கி.மீ., துாரம் பகிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது. இதன் வழியாக தான், வடசென்னை குடியிருப்புகளின் கழிவுநீர், மழைநீர் ஒட்டு மொத்தமாக வெளியேறி கடலில் கலக்கிறது.
திருவொற்றியூர் குப்பை மேடு அருகே, கடந்த வாரம், 15 - 20 அடி நீளமுள்ள தடுப்பு சுவர் திடீரென இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது. மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பமும் கால்வாயில் விழுந்து கழிவுநீரில் மூழ்கியது.
தகவலறிந்த, ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் அங்கு பார்வையிட்டார். அவ்வழியே போக்குவரத்து இருப்பதால், வாகனங்கள் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து ஏற்படாத வண்ணம், தடுப்புக்காக அபாய பிளாஸ்டிக் கயிறு கட்டப்பட்டது. இடிந்த சுவற்றை சீரமைக்காவிடில் திடீர் வெள்ளப் பெருக்கு அபாயம் இருப்பதாக, ஏழாவது வார்டு குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.
சுவர் இடிந்து விழுந்து, ஒரு வாரமாகியும் எந்தவொரு சீரமைப்பு பணியும், மேற்கொள்ளப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய தார் சாலையில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் அழுத்தம் ஏற்பட்டு, பக்கவாட்டு சுவர் இடிந்து உள்ளே விழுந்திருக்கலாம். விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.