/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நுங்கம்பாக்கம், புரசை அணிகள் கிரிக்கெட் 'லீக்'கில் அபாரம் நுங்கம்பாக்கம், புரசை அணிகள் கிரிக்கெட் 'லீக்'கில் அபாரம்
நுங்கம்பாக்கம், புரசை அணிகள் கிரிக்கெட் 'லீக்'கில் அபாரம்
நுங்கம்பாக்கம், புரசை அணிகள் கிரிக்கெட் 'லீக்'கில் அபாரம்
நுங்கம்பாக்கம், புரசை அணிகள் கிரிக்கெட் 'லீக்'கில் அபாரம்
ADDED : ஜூலை 21, 2024 01:05 AM
சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.
மூன்றாவது டிவிஷன் 'ஏ' மண்டல போட்டி, ஆவடி முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்தது. அதில், நுங்கம்பாக்கம் சி.சி., - பிரேம் சி.சி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பிரேம் சி.சி., அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த நுங்கம்பாக்கம் சி.சி., அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 173 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த, பிரேம் சி.சி., அணி, 45.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 159 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில், நுங்கம்பாக்கம் அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ராயப்பேட்டை அமீர் மஹாலில் நடந்த, நான்காவது டிவிஷன் ஆட்டத்தில், புரசைவாக்கம் சி.சி., மற்றும் டைகர் சி.சி., அணிகள் மோதின.
டாஸ் வென்ற புரசைவாக்கம் அணி, முதலில் விளையாடி 47.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 195 ரன்களை அடித்துக் குவித்தது.
அடுத்து பேட் செய்த, டைகர் சி.சி., அணி, 30.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 139 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 56 ரன்கள் வித்தியாசத்தில் புரசைவாக்கம் அணி வெற்றி பெற்றது.