காசிமேடில் புதிதாக மீன் இறங்குதளம்
காசிமேடில் புதிதாக மீன் இறங்குதளம்
காசிமேடில் புதிதாக மீன் இறங்குதளம்
ADDED : ஜூன் 23, 2024 01:45 AM

சென்னை:''காசிமேடில் இட நெருக்கடியை தவிர்க்க, பாரதியார் நகரில் 12 கோடி ரூபாயில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடியை தவிர்க்க, பாரதியார் நகரில் மீன் இறங்குதளம், பழவேற்காடு மீன் இறங்கு தள மேம்பாட்டு பணிகள், 12 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்டம், சின்னமுதலியார் சாவடியில் 12.30 கோடி ரூபாயில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம், கானத்துார் ரெட்டி குப்பத்தில் 19 கோடி ரூபாயில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி
உபகரணங்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.