/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போக்குவரத்து நெரிசலால் புதிய துணி கடை மூடல் போக்குவரத்து நெரிசலால் புதிய துணி கடை மூடல்
போக்குவரத்து நெரிசலால் புதிய துணி கடை மூடல்
போக்குவரத்து நெரிசலால் புதிய துணி கடை மூடல்
போக்குவரத்து நெரிசலால் புதிய துணி கடை மூடல்
ADDED : ஜூன் 10, 2024 02:32 AM

கொளத்துார்,:சென்னை கொளத்துார், பேப்பர் மில்ஸ் சாலையில், 'ரேட் ஸ் ரீட்' எனும் பெயரில், ஆடை மற்றும் காலணிகள் விற்கும் புதிய கடை, நேற்று காலை 9:00 மணிக்கு திறக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, நேற்று முன்தினம், 'கடை திறப்பு விழா அன்று, 9 ரூபாய்க்கு, 3 உடை அல்லது 3 செட் காலணி வாங்கலாம்' என, திறப்பு விழா சலுகை அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 4:00 மணி முதல், கடையின் முன் மக்கள் குவிய துவங்கினர்.
நேரம் அதிகரிக்க அதிகரிக்க, சலுகை விலையில் பொருட்கள் வாங்க ஆண், பெண் என, கூட்டம் அலைமோதியது. அரை கி.மீ., துாரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
கடை திறக்கப்பட்ட பின்னும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கடைக்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பொருட்கள் வாங்கும் ஆசையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், விடுமுறை நாளான நேற்று, ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் குறுகிய பேப்பர் மில்ஸ் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த கொளத்துார் போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்தார்.
அவரை போலீசார் மீட்டு காப்பாற்றினர்.
மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, திறப்பு விழா கண்ட ஒரு மணி நேரத்திலேயே கடையை மூட வைத்தனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.