ADDED : ஜூலை 21, 2024 01:17 AM
சென்னை:சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹால், ஸ்ரீதியாக பிரம்ம கான சபாவில், நாதஸ்வர விழா நாளை துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.
'பாக்யம்' கட்டுமான நிறுவனத்தாருடன் இணைந்து பிரம்ம கான சபா வழங்கும் இவ்விழாவில், நாதஸ்வர இசையில் உச்சங்களைத் தொட்ட கலைஞர்களுக்கு விருதும் வழங்கப்படுகிறது.
தவிர, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், மாலை 6:30 மணிக்கு பிரபல நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்களின் இசைக்கச்சேரியும் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாலை 5:00 மணிக்கு துவங்கி இரவு 8:30 வரையில் 'தமிழ் இசை விழா' நடக்கிறது.