Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 8 திருப்பங்களில் இயங்காத சிக்னல் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

8 திருப்பங்களில் இயங்காத சிக்னல் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

8 திருப்பங்களில் இயங்காத சிக்னல் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

8 திருப்பங்களில் இயங்காத சிக்னல் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

ADDED : ஜூன் 24, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நாராயணபுரம்:தாம்பரம் - வேளச்சேரி சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இங்கு, நாராயணபுரம் முதல் ஜல்லடியன்பேட்டை வரை உள்ள எட்டு திருப்பங்களில், எந்த சிக்னலும் செயல்படவில்லை.

குறிப்பாக, பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் இடத்தில் உள்ள சிக்னல் இயங்காததால், இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், சாலையின் வலதுபுறம் திரும்புவதற்காக, வாகனங்கள் காத்து நிற்கின்றன.

இந்த நேரங்களில், ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல நினைப்பதால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதும், மோதுவதும் அடிக்கடி நிகழ்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் இடையே அவ்வப்போது கைகலப்பும் அரங்கேறுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பள்ளிக்கரணை உட்பட எட்டு திருப்பங்களில் உள்ள சிக்னல் விளக்குகள் அனைத்தும் முறையாக இயங்குவதற்கு, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us