/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொடூரமாக தாக்கிய மருமகள் கமிஷனரிடம் மாமியார் புகார் கொடூரமாக தாக்கிய மருமகள் கமிஷனரிடம் மாமியார் புகார்
கொடூரமாக தாக்கிய மருமகள் கமிஷனரிடம் மாமியார் புகார்
கொடூரமாக தாக்கிய மருமகள் கமிஷனரிடம் மாமியார் புகார்
கொடூரமாக தாக்கிய மருமகள் கமிஷனரிடம் மாமியார் புகார்
ADDED : ஜூலை 05, 2024 12:26 AM
வேப்பேரி, மாமியாரை கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மருமகள் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தி.நகர் கண்ணையா தெருவைச் சேர்ந்தவர் பிரேமா, 66. இவர் நேற்று மதியம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
புகாரில் பிரேமா கூறியுள்ளதாவது:
என் இளைய மகன் தனசேகர், அவரது மனைவி சாமுண்டீஸ்வரி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, இரண்டு மாதங்களாக தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி மாலை 6:30 மணியளவில், நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வந்த சாமுண்டீஸ்வரி, கதவை மூடிவிட்டு, கண்மூடித்தனமாக என்னை தாக்கினார். மேலும், மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து, பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆதாரத்துடன் புகார் அளித்தேன்.
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.