/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையம் கழிப்பறையால் சுகாதார சீர்கேடு எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையம் கழிப்பறையால் சுகாதார சீர்கேடு
எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையம் கழிப்பறையால் சுகாதார சீர்கேடு
எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையம் கழிப்பறையால் சுகாதார சீர்கேடு
எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையம் கழிப்பறையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 18, 2024 12:25 AM

அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம் பகுதியில், எம்.எம்.டி.ஏ., காலனி பேருந்து நிலையம் செயல்படுகிறது.
இங்கிருந்து, பிராட்வே வரை செல்லும், 'தடம் எண்: 15ஜி' அண்ணா சதுக்கம் வரை செல்லும் 'தடம் எண்: 27பி' பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையத்தில் இருந்து, தினமும் சூளைமேடு, பெரியார் பாதை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையத்தில், பாராமரிப்பு படுமோசாமாக உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அதேபோல, நிலையத்தில் உள்ள மாநகராட்சி கழிப்பறை படுமோசமாகி சுகாதார சீர்கேடில் சிக்கி உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, கழிப்பறையை துாய்மைப்படுத்த சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.