/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்கேபிள் பதிப்பு பணி தாமதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு மின்கேபிள் பதிப்பு பணி தாமதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
மின்கேபிள் பதிப்பு பணி தாமதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
மின்கேபிள் பதிப்பு பணி தாமதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
மின்கேபிள் பதிப்பு பணி தாமதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 04, 2024 12:53 AM
வேளச்சேரி, வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2 கி.மீ., துாரம், 80 அடி அகலம் உடையது. இந்த சாலை, மூன்று ஆண்டுகளுக்கு முன் முழு பயன்பாட்டுக்கு வந்தது.
மடிப்பாக்கம், நங்கநல்லுார், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிமக்கள், திருவான்மியூர், அடையாறு, தரமணி பகுதிகளுக்கு துரித பயணமாக இருவழிபாதையாக செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இதனால், வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் நெரிசல் குறைந்தது. மேலும், நடைபயிற்சி செல்வோரும் அதிகரித்து உள்ளனர்.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், ரயில்வே சாலையில் 400 கி.வாட் திறன் உடைய கேபிள் பதிக்கும் பணி துவங்கியது.
இந்த கேபிள், தரமணி துணை மின் நிலையத்தில் இருந்து, சித்தாலப்பாக்கம் வரை 20 கி.மீ., துாரத்தில் பதிக்கப்படுகிறது.
இதற்காக, ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, ஊராட்சி ஆகிய துறைகளிடம், சாலை துண்டிப்பு அனுமதி பெற வேண்டும்.
போக்குவரத்து அதிகமுள்ள, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், பணியை கணக்கிட்டு குறிப்பிட்ட நாள் மட்டும் அனுமதி வழங்கப்படும். அதற்குள், பணியை முடித்து விடுகின்றனர்.
ஆனால், ரயில்வே நிர்வாகம், சாலை துண்டிப்புக்கு அனுமதி மட்டும் வழங்கி உள்ளது. இத்தனை நாளில் பணியை முடிக்க வேண்டும் என வழங்கவில்லை. இதனால்,2 கி.மீ., துாரத்தில் கேபிள் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.
சாலையில் பாதி அளவு துண்டித்ததால், வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையை ஒட்டி உள்ள, வி.ஜி.பி.செல்வா நகர், பேபிநகர், டான்சிநகர், அன்னை இந்திராநகர் உள்ளிட்ட சாலைகள், ரயில்வே சாலையுடன் இணைகின்றன.
சாலையில் தடை விதித்ததால், நகரில் உள்ள மக்கள், ரயில் நிலையம் செல்ல, 3 கி.மீ., சுற்ற வேண்டி உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே சாலையில், கேபிள் பதிக்கும் பணியை வேகமாக முடித்து, வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.