/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ 'ராம்ப்' பணிகள் நாதமுனியில் துவக்கம் மெட்ரோ 'ராம்ப்' பணிகள் நாதமுனியில் துவக்கம்
மெட்ரோ 'ராம்ப்' பணிகள் நாதமுனியில் துவக்கம்
மெட்ரோ 'ராம்ப்' பணிகள் நாதமுனியில் துவக்கம்
மெட்ரோ 'ராம்ப்' பணிகள் நாதமுனியில் துவக்கம்
ADDED : ஜூன் 18, 2024 12:22 AM

சென்னை, சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில் சோழிங்கநல்லுார் - மாதவரம் இடையே மேம்பால ரயில் நிலையங்கள் பல உள்ளன.
இந்நிலையில், கொளத்துார் - நாதமுனி இடையே அமையவுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது அதில் தீர்வு காணப்பட்டு, சுரங்கப்பாதையையும், மேம்பாலத்தையும் இணைக்கும் வகையிலான 'ராம்ப்' எனும் பெரிய அளவு சாய்தளம் அமைக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 44.6 கி.மீ., துாரத்தில், பெரும்பாலான ரயில் நிலையங்கள் மேம்பாலப் பாதையில் அமைக்கப்படுகின்றன.
இத்தடத்தில் கொளத்துார் - நாதமுனி இடையே 5 கி.மீ., துாரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. விரைவில் சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படும்.
அதேபோல், நாதமுனி பகுதியில் சுரங்கப்பாதையையும், மேம்பாலத்தையும் இணைக்கும் வகையில் சாய்தளம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே திட்டமிட்டபடி, 2026 முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.