ADDED : ஜூன் 20, 2024 12:31 AM
புழல், செங்குன்றம் அடுத்த அய்யப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 38. இவர், மாதவரம், மஞ்சம்பாக்கத்தில், லாரி பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, வேகமாக வந்த 'டெம்போ டிராவலர்' வேன் மோதி, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேலுார், நவாப் பேட்டையைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் கரிமுல்லா, 60, என்பவரை கைது செய்தனர்.