/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தவிர்க்க மேயர் வேண்டுகோள் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தவிர்க்க மேயர் வேண்டுகோள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தவிர்க்க மேயர் வேண்டுகோள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தவிர்க்க மேயர் வேண்டுகோள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தவிர்க்க மேயர் வேண்டுகோள்
ADDED : மார் 13, 2025 11:34 PM

அரும்பாக்கம், ''சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும், 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும்,'' என, மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தில், தானியங்கி துணிப்பை விற்னை இயந்திரத்தை, மாநகராட்சி மேயர் பிரியா திறந்து வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி :
'மஞ்சப்பை' திட்டத்தில் முதற்கட்டமாக, 25 மஞ்சப்பை இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இரண்டாம் கட்டமாக நேற்று, 17 இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஆறு மாத்திலேயே சென்னையில், 50,000 மஞ்சப்பை வழங்கப்பட்டு உள்ளன.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அனைவருக்கும் கேடு விளைவிக்கும். துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் கால்வாயில் சேர்ந்து, நீரோட்டம் தடை ஏற்படுகிறது. ஆனால், துணிப்பையை, 15 முறைக்குமேல் பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் தீங்கு ஏற்படாது.
கடந்தாண்டில் மட்டும், பிளாஸ்டிக் பயன்படுத்திய விற்பனையாளர்களுக்கு, 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்திக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகை, தமிழில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரியா கூறினார்.