/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜூன் 23, 2024 01:39 AM

சென்னை:பெரும்பாக்கத்தில் உள்ள, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, கடந்த 18ம் தேதி இரவு, மர்மநபர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், 'சென்னை - மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. இரவு 9:30 மணியளவில் வெடிக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே, இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா, 27, என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
அவரை நேற்று முன்தினம், போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார், திருவையாறில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, மொபைல் போன், இன்டர்நெட் மோடம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண்ணை பத்தாம் வகுப்பிலிருந்து பிரசன்னா ஒருதலையாக காதலித்துள்ளார். அவரது காதலை ஏற்க அப்பெண் மறுத்ததால் அவரை பழிவாங்க முகவரி மாற்றி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.