/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஹோட்டல் கேஷியரை கத்தியால் குத்தியவர் கைது ஹோட்டல் கேஷியரை கத்தியால் குத்தியவர் கைது
ஹோட்டல் கேஷியரை கத்தியால் குத்தியவர் கைது
ஹோட்டல் கேஷியரை கத்தியால் குத்தியவர் கைது
ஹோட்டல் கேஷியரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : மார் 13, 2025 11:55 PM
திருவான்மியூர், அடையாறு, எல்.பி., சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணிபுரிபவர் திருக்குமரன், 32.
நேற்று மதியம், திருவான்மியூர், அண்ணா தெருவை சேர்ந்த கொத்தனாரான வேலு, 38, என்பவர், போதையில் ஹோட்டலில் சாப்பிட்டார்.
அவரிடம், பணம் கேட்டபோது இல்லை என கூறி, மொபைல் போனை திருக்குமரனிடம் கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்து பணம் எடுத்து வருவதாக சென்றார்.
ஆனால், வீட்டில் இருந்து கத்தி எடுத்து வந்து, 'என்னிடமே பணம் கேட்கிறாயா' என கூறி, திருக்குமரனின் தாடையில் குத்தினார்.
பலத்த காயமடைந்த திருக்குமரனுக்கு, மூன்று தையல் போடப்பட்டது. திருவான்மியூர் போலீசார், வேலுவை கைது செய்தனர்.