/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ேஹாட்டலில் மாமூல் போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' ேஹாட்டலில் மாமூல் போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ேஹாட்டலில் மாமூல் போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ேஹாட்டலில் மாமூல் போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ேஹாட்டலில் மாமூல் போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 19, 2024 12:18 AM
வடபழனி,
வடபழனி 100 அடி சாலையில் 'ஜிஞ்சர்' என்ற பெயரில் ேஹாட்டல் அமைந்துள்ளது.
கடந்த 31ம் தேதி, ேஹாட்டலுக்கு வந்த மர்ம நபர், தன்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரி எனக் கூறி சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ேஹாட்டல் மேலாளர் ஜெயராஜ், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், திருவான்மியூரைச் சேர்ந்த பவாஷா, 26, என்பதும், ஆயுதப்படை போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது.
அவர் மீது, கடந்த 14ம் தேதி ஆறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். 15ம் தேதி துறைரீதியாக, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அவர் தலைமறைவானார். திருச்சியில் பதுங்கியிருந்த பவாஷாவை, வடபழனி போலீசார் நேற்று கைது செய்தனர்.
பவாஷா ஏற்கனவே, கடந்த 2022ல் திருவான்மியூரில் உள்ள 'ஸ்பா'விற்கு சென்று, துணை கமிஷனர் தனிப்படை எனக் கூறி 5,000 ரூபாய் பறித்து செல்லும்போது போலீசாரிடம் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.