ADDED : மார் 13, 2025 11:42 PM
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில், தாம்பரம் மாநகர காவல் போக்குவரத்து துணைக் கமிஷனர் அலுவலகம் உள்ளது.
இதை முற்றுகையிட்டு, தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோரம் நிற்கும் தண்ணீர் லாரிகள் மீது, போக்குவரத்து போலீசார் அடிக்கடி வழக்குப்பதிவு செய்வதாகவும், 10,000 ரூபாய் வரை அபராதம் போடுவதாகவும் கூறி, போராட்டம் நடத்தினர். போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்திய பின், அனைவரும் கலைந்து சென்றனர்.