ADDED : ஜூலை 11, 2024 12:05 AM
சென்னை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு தனிநபர், சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது.
அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வட்டி விகிதம் 1.25 லட்சம் ரூபாய்க்கு, 7 முதல் 8 சதவீதம் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். கழகத்தின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.