/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டாக்டர் முகமது ரேலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர் முகமது ரேலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
டாக்டர் முகமது ரேலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
டாக்டர் முகமது ரேலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
டாக்டர் முகமது ரேலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ADDED : ஜூன் 18, 2024 12:32 AM

சென்னை, ரேலா மருத்துவமனையின் தலைவரும், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகமது ரேலாவிற்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ரேலா மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு:
பேராசிரியர் முகமது ரேலா சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். இதுவரை, 400க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும், ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டுள்ளார்.
ஏறத்தாழ, 6,000க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட இவர், பிறந்து ஐந்து நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதற்காக, 'கின்னஸ்' சாதனை பதிவேட்டில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில், 28 ஆண்டுகளுக்கு அதிகமான அனுபவத்தை கவுரவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சேவையாளர்கள் என்ற ஏ.ஹெச்.பி.ஐ. சங்கத்தின் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது, முகமது ரேலாவிற்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.