/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றார் குமரி வீரர் 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றார் குமரி வீரர்
'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றார் குமரி வீரர்
'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றார் குமரி வீரர்
'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றார் குமரி வீரர்
ADDED : ஜூலை 30, 2024 12:54 AM

சென்னை, தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் சார்பில், மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு உட்பட, மொத்தம் 14 வகை போட்டிகள் நடத்தப்பட்டன.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட மாநில முழுதும் இருந்து, 202 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, கட்டுடலை காட்டி அசத்தினர்.
அனைத்து போட்டிகளின் முடிவில், ஒட்டுமொத்த 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டத்தை, கன்னியாகுமரி வீரர் மரியஜோன் என்பவர் கைப்பற்றி, 25,000 ரொக்கப் பரிசை வென்றார்.
ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூசன் என்பவருக்கு, 10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.