/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய பஸ் சேவை துவக்கம் கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய பஸ் சேவை துவக்கம்
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய பஸ் சேவை துவக்கம்
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய பஸ் சேவை துவக்கம்
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய பஸ் சேவை துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 12:46 AM
சென்னை, கிளாம்பாக்கம் - திருவள்ளூர் இடையே '297' எனும் வழித்தட எண் உடைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாள நகர் ஆகிய பகுதிகள் வழியாக, இப்பேருந்துகள் இயக்கப்படும்.
காலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்தும், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6:45 மணியில் இருந்து இரவு 9:00 மணி வரை இரண்டு மணி நேர இடைவெளியிலும், பேருந்துகள் இயக்கப்படுவதாக, மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதளமான 'எக்ஸ்'சில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.