/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மயிலையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு மயிலையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
மயிலையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
மயிலையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
மயிலையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : ஜூலை 09, 2024 12:24 AM
ராயப்பேட்டை, ஜூலை 9-
மயிலாப்பூர், ராஜசேகர் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராணி, 65. இவர் நேற்று மதியம், ராயப்பேட்டை டாக்டர் நடேசன் சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவர் மூதாட்டியை வழிமறித்து, அவரது செயினை பறிக்க மர்ம நபர் ஒருவர் அருகே காத்திருப்பதாக கூறியுள்ளனர். பிறகு, மூதாட்டியை ஆட்டோவில் அமர வைத்து, 3.5 சவரன் நகையை கழற்ற வைத்துள்ளனர். பின் அதை, காகிதத்தில் மடித்து அவரது கைப்பையில் போடுவது போல ஏமாற்றி, நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின்படி, ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.