6 தாலுகாக்களில் 25, 26ல் ஜமாபந்தி
6 தாலுகாக்களில் 25, 26ல் ஜமாபந்தி
6 தாலுகாக்களில் 25, 26ல் ஜமாபந்தி
ADDED : ஜூன் 20, 2024 12:25 AM
சென்னை, சென்னை மாவட்டத்திற்கு உட்பட சோழிங்கநல்லுார், ஆலந்துார், அம்பத்துார், மாதவரம், மதுரவாயல் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஆறு தாலுகாக்களில், பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், வரும் 25, 26ம் தேதிகளில் ஜமாபந்தி நடக்கிறது.
அந்தந்த தாசில்தார் அலுவலங்களில், காலை, 9:00 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது. ஆலந்துாரில் சென்னை மாவட்ட கலெக்டரும், சோழிங்கநல்லுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கின்றனர். அம்பத்துார், மாதவரம் மற்றும் மதுரவாயலில், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமை வகிக்கின்றனர்.
திருவொற்றியூரில் மாவட்ட ஆய்வுக்குழும அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்போர், பட்டா உள்ளிட்ட இதர மனுக்களை அளித்து பயன்பெறலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.