/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் இயக்க வழக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் இயக்க வழக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் இயக்க வழக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் இயக்க வழக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் இயக்க வழக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜூலை 10, 2024 12:05 AM
சென்னை, சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமையும் வரை, ஆம்னி பேருந்துகளை கோயம்பேடில் இருந்து இயக்கும்படி உத்தரவிட, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் துவக்கப்பட்டது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், இங்கிருந்து புறப்படுகின்றன; தனியார் ஆம்னி பேருந்துகளும், இங்குதான் பயணியரை ஏற்றி இறக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம், உயர்மட்ட நடைமேடை உடன் புறநகர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில் ஆகியவை அமையும் வரை, கோயம்பேடில் இருந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளை இயக்க உத்தரவிடக் கோரி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகளை இயக்க வேண்டும் என, அரசின் உத்தரவை எதிர்த்த மனுக்கள், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளன,'' என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க, முதல் பெஞ்ச் மறுத்து விட்டது. மனுவை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி, மனுதாரருக்கு, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.