ADDED : மார் 13, 2025 12:52 AM
வளசரவாக்கம், வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து, வளசரவாக்கம் போலீசார் கண்காணித்து வந்தனர்.
வளசரவாக்கம், வெங்கட சுப்பிரமணி நகரில் ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த, ஆவடியைச் சேர்ந்த விஜயலட்சுமி, 42, என்பவரை கைது செய்தனர்.
மேலும், பாலியல் தொழில் ஈடுபடுத்துவதற்காக தங்க வைத்திருந்த பெண்ணை மீட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில், போலீசார் ஒப்படைத்தனர்.