ஹோட்டல் கண்ணாடி விழுந்து ஊழியர் பலி
ஹோட்டல் கண்ணாடி விழுந்து ஊழியர் பலி
ஹோட்டல் கண்ணாடி விழுந்து ஊழியர் பலி
ADDED : ஜூலை 19, 2024 12:27 AM
செம்மஞ்சேரி, ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 36. இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள 'விவாண்டா' நட்சத்திர ஹோட்டலில், 10 ஆண்டுகளாக கண்ணாடியை சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார்.
கடந்த 8ம் தேதி, அங்குள்ள நீச்சல் குளத்தில் உள்ள 20 அடி உயரத்தில் இருந்த கண்ணாடியை சுத்தம் செய்தார். அப்போது, கண்ணாடி உடைந்து, சூர்யா தலையில் விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவர், பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். நேற்று, சிகிச்சை பலனின்றி பலியானார். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.