ADDED : ஜூலை 26, 2024 12:22 AM

ஆவடி, ஆவடி காந்தி நகரில், கடந்த சில நாட்களாக குதிரை ஒன்று, குட்டியுடன் சுற்றி வந்தது. நேற்று முன்தினம் இரவு, சாலையோரம் சுற்றி திரிந்த குதிரை குட்டியை, அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்துக் குதறின.
தகவலறிந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர், நாயிடம் இருந்து குதிரை குட்டியை மீட்டனர். பின், வாகனத்தில் ஏற்றி, அடையாறு, ப்ளூ கிராஸ் சாலையிலுள்ள விலங்குகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு, குதிரை குட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, காயத்திற்கு மருந்திடப்பட்டது.