/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஹாக்கி, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு ஹாக்கி, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ஹாக்கி, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ஹாக்கி, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ஹாக்கி, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஜூன் 07, 2024 12:41 AM
சென்னை, சென்னையில், ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாட்டுக்கான இலவச பயிற்சி முகாம்,'ஸ்போர்ட்ஸ் கனெக்ட் குளோபல்' அமைப்பு சார்பில், ஐ.சி.எப்., விளையாட்டு அரங்கில் 30 நாட்கள் நடைபெற்றது.
சிறுவர், சிறுமியர் என, 121 பேர் பங்கேற்ற இதில், ஹாக்கி விளையாட்டுக்கு முகமது ரியாஸ், கிறிஸ்டி எலினா ஆகியோரும், கூடைப்பந்து விளையாட்டுக்கு பிரசன்ன குமாரி, சசிகலா ஆகிய முன்னாள் சர்வதேச வீரர்களும் பயிற்சி அளித்தனர்.
நேற்று முன்தினம் நடந்த முகாமின் நிறைவு விழாவில்,'ஸ்போர்ட்ஸ் கனெக்ட்' அமைப்பின் தலைவரும், முன்னாள் சர்வதேச தொழில்முறை கூடைப்பந்து வீரருமான புருஷோத்தமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் சிறுவர், சிறுமியருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.