/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 3 வயது குழந்தைக்கு தொல்லை ஐ.டி., ஊழியர் கைது 3 வயது குழந்தைக்கு தொல்லை ஐ.டி., ஊழியர் கைது
3 வயது குழந்தைக்கு தொல்லை ஐ.டி., ஊழியர் கைது
3 வயது குழந்தைக்கு தொல்லை ஐ.டி., ஊழியர் கைது
3 வயது குழந்தைக்கு தொல்லை ஐ.டி., ஊழியர் கைது
ADDED : ஜூன் 03, 2024 01:43 AM
திருவொற்றியூர்:மூன்றரை வயது பெண் குழந்தைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி., ஊழியரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இருவரும் வேலைக்குச் செல்வதால் பெண் குழந்தையை, தெரிந்தவர் வீடான, ஐ.டி., ஊழியர் வினோத்குமார், 33, என்பவர் வீட்டில் விட்டுவிட்டுச் செல்வது வழக்கம்.
மாலையில், வேலை முடித்து வரும் தம்பதி, குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவர். இதே போல், கடந்த மே 31ம் தேதி, குழந்தையை இவரிடம் விட்டுச் சென்றுள்ளனர்.
மாலையில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது, குழந்தையின் பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டதாகவும், விசாரித்த போது, வினோத்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத்குமாரை போக்சோ சட்டத்தில், நேற்று மாலை கைது செய்தனர். விசாரணைக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.