Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (20.06.2024)

இன்று இனிதாக (20.06.2024)

இன்று இனிதாக (20.06.2024)

இன்று இனிதாக (20.06.2024)

ADDED : ஜூன் 20, 2024 12:18 AM


Google News
ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

நரசிம்மர் பிரம்மோற்சவம் முன்னிட்டு, சூரிய பிரபை வாகன புறப்பாடு, காலை 6:15 மணி. சந்திர பிரபை வாகன புறப்பாடு, இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 வெள்ளீஸ்வரர் கோவில்

வெள்ளீஸ்வரர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சந்திரசேகரர், நால்வர் மாடவீதி உலா, காலை 7:00 மணி. குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதி உலா, இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு.

 அய்யப்பன் கோவில்

உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடிநாம யக்ஞம், மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.

 பரசுராமலிங்கேஸ்வரர் கோவில்

பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை தொட்டி உற்சவம், மாலை பிச்சாண்டார் உற்சவம். இடம்: அயன்புரம் - 23.

 சொற்பொழிவு

உபன்யாசம், 'திருமலையில் திருமகள்'மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ மகாலட்சுமி கோவில், 148, நாராயணன் தெரு, பாலாஜி நகர், பள்ளிக்கரணை.

 வள்ளலார் வழிபாடு

அகவல் பாராயணம், தீப வழிபாடு, அன்னம்பாலிப்பு காலை 8:00 மணி முதல், இடம்: தீபம் அறக்கட்டளை, ஏரிக்கரை தெரு, வேளச்சேரி.

பொது

 கண்காட்சி

பூம்புகார் நிறுவனம் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

 இலக்கிய வீதி ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் பதிப்புலகின் பேரொளிகள், பங்கேற்பு: வடிவேலு செட்டியார், ரெங்கையா முருகன், துரை லட்சுமிபதி. மாலை 6:15 இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us