மாடுகளால் ஜி.எஸ்.டி., சாலையில் பீதி
மாடுகளால் ஜி.எஸ்.டி., சாலையில் பீதி
மாடுகளால் ஜி.எஸ்.டி., சாலையில் பீதி
ADDED : ஜூன் 07, 2024 12:13 AM

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சியில், சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபகாலமாக, இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், வழக்கம் போல், மாடுகளை, அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல், சாலையில் விட்டு விடுகின்றனர்.
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் மாடுகள் வரிசையாக படுத்திருப்பதை, தினசரி பார்க்க முடிகிறது.
சாலையில் படுத்திருக்கும் அவை, திடீரென குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் சூழல் இருப்பதாக பீதி அடைகின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளை பிடிப்பதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.